Wednesday, 10 February 2016

Stories

பணம் படுத்தும் பாடு : 
                                                                                            
                                                                                       ஒரு ஊரில் ரமேஷ்,சுரேஷ் ,மகேஷ், தினேஷ் என நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் நடந்து செல்லும்போது  சுரேஷ் ஒரு மூட்டையை பார்த்தான். சுரேஷ் தன் நண்பர்களிடம் இதை பற்றி கூற ரமேஷ் மூட்டையை திறந்தான். உள்ளே மூட்டை நிறைய பணம் இருந்தது. பணத்தை பார்த்தவுடன் சுரேஷ் "இது என் பணம் இதை நான் தான் முதலில் பார்த்தேன்"என்றான். இதை கேட்டவுடன் கோபமுற்ற ரமேஷ் சுரேஷை பலமாக அடித்தான்.அடித்த அடியில் சுரேஷ் இறந்து போனான். மற்ற மூவரும் இவனை புதைத்து விட்டு நாம் இவற்றை வைத்துக்கொள்வோம் என்று முடிவுக்கு வந்தனர்.அதில் ரமேஷை சாப்பாடு வாங்கி வர தினேஷ்  கூறினான். ரமேஷிற்கு சந்தேகமாக இருக்க அவன் மகேஷை அனுப்பி வைத்தான். தயக்கத்துடன் அவனும் சென்றான்.மகேஷ் வருவதற்குள்  ரமேஷ் தினேஷை அடித்து கொன்றான்.மகேஷ் வந்தவுடன் ரமேஷ் மகேஷையும் கொன்றான்.ரமேஷ் அவன் வாங்கி வந்த  சாப்பாட்டை சாப்பிட்டு அவனும் உயிரிழந்தான். மகேஷ் வாங்கி வந்த சாப்பாட்டில் விஷம்  கலந்திருந்தான்.
நீதி : பணம் நட்பை கெடுக்கும், உயிரை கொல்லும்

ஒரு மனிதன் ஒரே ஒரு மனிதன் :
                                                ஒரு முறை ஒரு குரு தன் சீடர்களில் ஒருவரிடம் "என்னை விருந்துக்கு ஒருவர் அழைத்துள்ளார், நீ அங்கு சென்று எத்தனை மனிதர்கள் வந்துள்ளார்கள் என்று பார்த்து வா" என்றார். தன் குரு ஒரு காரணமாகத்தான் இப்படி கூறுகிறார் என்று நினைத்தான் அந்த சீடன் . விருந்து  நடக்கும் இடத்திற்கு சென்று ஒரு மரக்கட்டையை எடுத்து அந்த இடத்தின் வாசலில் போட்டார். மகேஷ்  என்று ஒருவர் வந்து மரக்கட்டையில்  தடுக்கி விழுந்தார். அவர் இதை யார் இங்கு போட்டது என்று நினைத்து  அவர் அவர் வழியில் சென்றார்.இதை போல் பலர் தடுக்கி விழுந்து அவர் அவர்  வழியில் சென்றனர். அதில் அருள் என்னும் சிறுவன் மட்டும் அதில் தடுக்கி விழுந்து அந்த மரக்கட்டையை எடுத்து ஒரமாக போட்டான்.
அந்த சீடன்  அவர் குருவிடம் சென்று  ஒரே ஒரு சிறுவன் மட்டும் விருந்துக்கு வந்துள்ளான் என்றார்.


நீதி : நல்ல மனம் உடையவனே மனிதனாக கருதப்படுவான்.

No comments:

Post a Comment