Wednesday, 10 February 2016

About ozone

முன்னுரை :

        புவியின் வளிமண்டலம் பல அடுக்குகளால் ஆனது . அதில் ஓசோன்  (OZONE) என்பது வளிமண்டலத்தில்  உள்ள ஓரு இயற்கையின் 
படைப்பு. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதனுக்கு எந்த நோயுமில்லை. இன்று நாகரீகம் என்ற பெயரில் உணவும் கூட மாறிப்போய்விட்டது. இயற்கைக்கு எதிராக நமது மனித இனம் போய்க் கொண்டிருப்பதும், இதிலிருந்து மீள்வதும் உடனடி அவவியமாகிவிட்டது.
                                            
                                                   இன்றைய  நாகரீகமும், அறிவியல் கண்டுபிடிப்பும்   இயற்கையின் படைப்பை நாகாமக்குகிறது  என்பதை மனித இனத்திற்கு உணர்த்துவதன்  அடிப்படையே   இந்த ஆய்வாகும் .
                        
                                                                சூரியனிடமிருந்து வரும் வெப்பமிகு  புறஊதாக்கதிர்கள் (Ultra violet rays) என்னும்  ஒளிக்கதிர் மனித உடலில் பல நோய்களையும் , தாவரங்களுக்கும், கடல் வாழ்  உயிரினத்திற்கும் பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு கதிர் என்பது அறிவியல் உண்மை.

                                                                   இந்த புறஊதாக்கதிர்கள் தடுக்கும் ஒரு போர்வையாக  வளிமண்டலத்தில் மேலடுக்கில் படர்ந்திருக்கும் ஒரு படலமே ஓசோன் . இந்த படலம், நல்ல ஒளியை மட்டும் புவிக்கு அனுப்புகிறது. இத்தகைய அரும்பணியை செய்யும் ஓசோன் இன்று மனிதனின் செயற்கை  வாழ்வால் அழிவுக்கு உள்ளாகி வருகிறது .
                         
                                                             ஓசோன்  பாதுகாப்பையும் ஓசோன் அழிவை  தடுக்கும் முறைகளையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆய்வாகும் .                                                                                                                                                                                                                          
                       

  
 தொகுப்புரை :

                     ஓசோன் என்பது செயல்படும் ஆக்சிஜன் (Active oxygen)
ஆகும். இது ஆக்சிஜன் அணுக்களின் சரியான பிணைப்பால் முவணு ஆக்சிஜனாக சூரிய திரையாக புவியின் வளிமண்டலத்தில் உள்ளது.
                
                     புவியின்  வளிமண்டலம் அடி வளிமண்டலம் (troposphere),சட்றேடோச்பியர் (stratosphere),அயனிமண்டலம் (Ionosphere) என பிரிவுகளை கொண்டுள்ளது.
                  
                      புவிப்பரப்பிலிருந்து  15 km வரை அடிவளிமண்டலம் உள்ளது. புவிப்பரபிலிருந்து 15 km முதல் 50 km  வரை 420C வெப்பநிலையில்  சூரியக்கதிர்களை  தமக்குள் கவர்ந்து சூடான ஒரு படலமாகவே இந்த ஒசொன்படலம் உள்ளது.                                                            

                  
                                                    வளிமண்டலத்தின்  அடுக்குகள்                                                                                                                   
ஓசோன் உருவாக்கம் :
                                ஈரணு ஆக்சிஜன் + குரிய ஒளி  = ஓரணு ஆக்சிஜன் 
                                 02 +  solar radiation = 2 O
                 
                                 ஓரணு ஆக்சிஜன் + ஈரணு ஆக்சிஜன் = ஓசோன் 
                                  O+ 02 = o3

                    ஈரணு ஆக்சிஜன் இயற்கையாக சூரிய ஒளியால் ஓரணு ஆக்சிஜனாகி, மீண்டும் வேறொரு ஈரணு ஆக்சிஜனோடு இணைந்து ஒசோனகிறது.
         

 ஓசோன்  அழிவுறுதல்:
                 
             
                ஹைட்ராக்சில் அயனி (OH), நைட்ரிக் ஆக்சைடு (No), குளோரின் (CI)  புரோமின் (Br) ஆகியவை ஓசோன் அழிவுற காரணமானவை.
                  
                     குலூறோக்புளுரோ கார்பன் (CFC) புரோமொக்புளுரோ கார்பன் (BFC) ஓசோனை சிதைப்பதை கிழ்கண்ட வினையால் எளிதில் அறியலாம் .

CFC13 +ஒளி = CFC12 + C1   
C1+O3 = C1O+O2
C1O+O3+ஒளி=C1+2O

                        குலூறோக்புளுரோ கார்பன் சூரிய ஒளியுடன் சேர்ந்து குளோரின் அயனியை தரும். இந்த குளோரின் ஓசோனை நாசமாக்கி ஆக்சிஜனாக்கும்.
       
                 இந்த ஓசோன் மூலக்ககூறு குறைவு வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தில் ஒரு துளையை (ozone hole) ஏற்படுத்தியுள்ளது.

                 ஓசோன் மூழக்ககூறு எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம் புவியின் தட்ப வெப்பத்தையே மாற்றும் அபாயம் கொண்டது.


 ஆய்வுச்சுருக்கம் :

                         
                       புவிக்கோளில் உயிரினங்கள் தொடர்ந்து வாழவும், எதிர்காலத்தில் மக்கட்தொகை  பெருக்கத்தின் கீழ் வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                    உயிரினம் இப்புவியில் வாழ இன்றியாமையாதவை நீர், காற்று மற்றும் தட்ப வெப்பநிலை, இந்த மூன்றும் புவி  தவிர பிற கோள்களில் இல்லாததை நாம் அறிவோம்.

                     இந்த புவியின் வெப்பநிலையை நிர்ணயிக்கும் ஒரு காரணிதான் ஓசோன் படலம்.

                    இந்த ஆய்வு ஓசோன் படலம் பற்றியும், ஓசோனின் முக்கியத்துவம், ஓசோன் குறைவு ஏற்படுத்தும் விளைவுகள்  பற்றியும், இப்புவியை அழிவிலிருந்து மனித இனம் காப்பாற்றிக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும்  உள்ளடக்கியதே இந்த ஆய்வு ஆகும்.

  

ஆய்வு நோக்கம் :
             

                  சூரிய கதிர்களின் அதிபயங்கர வெப்பத்தையும், புற  ஊதக்கதிர்களையும் தடுத்து  புவிக்கு  குடையாக திகழ்வது ஓசோன் படலம். சூரியனின் இக்கதிர்வீச்சால் ஏற்பட்ட ஓசோன்படல ஓட்டையை 1980 ம் வருடங்களில் தான்  மனித இனம் கண்டறியவே முடிந்தது.

                   தற்போதைய வீதத்தில் ஓசோன் குறைந்து கொண்டே வருமானால் இன்னும் 50 ஆண்டுகளில் 3ல் இரண்டு மடங்க்காகத்தான் ஓசோன் எஞ்சி இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

                    சூரியனின் புறவஊதாக்கதிர்கள் மனிதனின் தோலை எரிக்கும் சக்தியும், தாவர இனத்தையே வேரறுக்கும்  தன்மையும் உடையது. இப்பாதிப்பு பூமத்தியரேகை பகுதியில்  அதிகமாக இருப்பதாகவும், உலகின் பிற பகுதிகளில் மனித இனத்திற்கு தோல் புற்று நோயை உண்டாக்கும் தன்மை உடையதையும், சகல ஜீவராசிகளும் இதிலிருந்து தப்பிக்க முடியாதென இதுவரை  நடந்த ஆய்வுகள் காட்டுகின்றன.

                இந்த ஆபத்திலிருந்து தப்பிபதற்கு ஒரே வழி நச்சு வாயு வெளியேற்றத்தை குறிப்பதாகும். ஓசோன் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ம் தேதியை உலக ஓசோன் தினமாக அனுசரிக்கிறோம்.

                      


ஓசோன் படலத்துளை :


                      அன்டார்டிக் பகுதியில் தற்போதைய ஓசோன் அளவு 1975 ல் உள்ளதைவிட 33% ஆக குறைந்துள்ளது. 

                         National Academy Of Sciences, (US) ஆய்வில் 2004 ன் ஓசோன் அளவு 25 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது. இந்த அளவு 2015 ல் 1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவாக குறையும் வாய்ப்புள்ளதைக் சுட்டிக்காட்டி உள்ளது.

                           ஓசோன் படலத்தை சிதைக்கும் மனிதன் பயன்படுத்தும் முக்கிய மூலப்பொருளான  குலூறோக்புளுரோ கார்பன் (CFC) எனும் பொருளின் பயன்பாடு 1975ல் உள்ளதை விட 50% அதிகரித்துள்ளது.

                         நாம் பயன்படுத்தும் குலூறோக்புளுரோ கார்பன் (CFC) 1 மூலக்கூறு 100000 ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கும் சக்தி வாய்ந்தவை.



                                    குளிர்சாதனப்பெட்டி (Air conditioner), குளிர்பதனப்பெட்டி (Refridgerator) ஆகியவற்றிலுள்ள குலூறோக்புளுரோ கார்பன் (CFC), பூச்சிக்கொல்லி மருந்திலுள்ள மீத்தைல் புரோமைடு (Methyl bromide), தீயணைக்கும் கருவியிலுள்ள Halons வாயுக்கள், தொழிற்சாலைகளில் கரைபொருளாக பயன்படும் மித்தைல் குலூறோக்புளுரோ(Methyl Chloroform) ஆகியனவும் ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

      ஓசோனின் சிறப்புகள் :
                      
      • சக்தி மிகு புற ஊதக்கதிரின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.(Prevents UV rays)
      • பாக்டீரியாக்களை குளோரின் அழிப்பதைவிட 51% அதிகமாகவும், 3100 மடங்கு வேகமாகவும் அழிக்கவல்லது.(destroy bacteria)
      • மைக்ரோஉயிர்பொருட்களை கட்டுபடுத்துகிறது.(Controls micro organisms)
      • நீரை சுத்திகரிக்க பயன்படுகிறது. (Sterlize water)
      • வேதிப்பொருள் பயன்பாட்டிற்கு சிறந்த மாற்றாக உள்ளது.(alternative to chemicals)
      • இது உலக அளவில் அங்க்கிகரீக்கப்பட்ட தடையில்லாத ஒரு வாயு (approved by FDA)
      • சுத்தமானது சுற்றுபுரத்திற்கு நண்பனாக விளங்குவது. (Clean and eco friendly)
      • உயரிய ஆக்சிஜன் தேவைகளை குறைக்கிறது (reduce bilogical oxygen demands)
      • காற்றை நறுமண மூட்ட பயன்படுகிறது.(deodorize air)  

      No comments:

      Post a Comment