நீங்கள் தினமும் படிக்கும் செய்த்திதாளை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். பிறகு வெனிஸ் நாடும் செய்தித்தாளை வெளியிட்டது. இந்தியாவில் முதன் முதலில் 1780ம் ஆண்டு செய்திதாள்கள் வெளியிடப்பட்டது. 1882ம் ஆண்டு "சுதேசமித்திரன் " எனும் இதழ் தமிழகத்தில் வெளியான முதல் இதழ் ஆகும். செய்திதாள்கள் இருவகைப்படும். அவை நாளிதழ் மற்றும் இதழ்கள். இதழ்களானது வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, வருடத்திற்கு ஒருமுறை என இதழ்கள் வெளியாகின்றன. அதுபோல் நாளிதழிலும், காலை நாளிதழ், மாலை நாளிதழ் என்று இருவகைகளாய் வெளியாகின்றன. இந்தியாவில் , 18 மொழிகளில் செய்திதாள்கள் வெளியாகின்றன. செய்திதாழ்களால் மக்கள் பலவித பயன் பெறுகின்றனர். வானிலை அறிக்கைகளை அறிய மக்களுக்கு இது மிகவும் தேவைப்படுகிறது. அரசின் நற்திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்க மிகவும் பயன்படுகிறது. மாணவ மாணவியரின் செயலாற்றும் திறனை வளர்க்க மிகவும் பயன்படுகிறது. சமுதாயம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுகிறது. தற்போது தொலைகாட்சியில், செல்போனில் அனைவரும் செய்தி படிக்கிறார்கள். நீங்கள் எந்த தொலைகாட்சி, செல்போனில் செய்தி படித்தாலும் செய்தித்தாள் போல் வராது. ஏனவே செய்திதாள் படியுங்கள் அறிவை வளருங்கள்!
No comments:
Post a Comment