Wednesday 10 February 2016

Biography of leaders

அப்துல்கலாம் :
                                      

                          


தமிழகத்தில் இராமேசுவரத்தில் 1931ம்  ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் பிறந்தவர் அப்துல்கலாம். இவரது தந்தை ஜெயினுலாம்தீன், தாய் ஆஷியம்மா.கலாம் அவர்கள் ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலை பள்ளி வரை இராமேஷசுவரத்தில்  கற்றார்.சென்னையில் பொறியியல் படிப்பை முடித்தார். அப்துல் கலாம் இந்தியாவின் 11ம்   ஜனாதிபதி ஆவார்.இவர் பத்ம பூசன்,பத்ம விபூசன் பாரத ரத்னா முதலிய விருதுகளை பெற்றுள்ளார்.இவர் கருத்துகள் பல கூறுவதில் வல்லவர். அவற்றுள் சில : கனவு காணு,கனவு என்பது தூங்கும் போது வருவதில்லை,உன்னை தூங்க விடாமல் செய்வது.நீ சூரியன் போல பிரகாசமாக வேண்டுமென்றால் நீ முதலில் சூரியன் போல எரிய வேண்டும்.
இப்படிப்பட்ட நல்லவர்,அறிவாளி,புத்திசாலி,விஞ்ஞானி என எல்லா பட்டத்துக்கும் உரியவர்  ஜூலை 27,2015 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் சென்றாலும் அவர் கருத்துகள் இங்கிருந்து செல்லாது.

காந்தியடிகள் :
                  
                               

காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் பிறந்தார். இவரது  இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் 
காந்தி  என்பதாகும். இவர் குடும்பத்தில் ஆறு குழந்தைகள்.பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லுரி படிப்பிற்கு இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்திற்கு செல்லும் முன் இவரது தாயார் கூரிய அறிவுரைகள் : புகை பிடிக்க கூடாது,புலால் உண்ணக் கூடாது, தவறான வழியில் நடக்ககூடாது என்பனவாகும். காந்தியடிகள் தன் தாயிடம் கொடுத்த வாக்கினாலே உயர்வுக்கு வந்தார்.இங்கிலாந்தில் சட்டக்கல்வி முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா    திரும்பினார். மும்பையில் வக்கீல் தொழில் செய்தார். காந்தியடிகளின் மனைவி   கஸ்தூரிபாய் அம்மையார்    ஆவார். தென்னாப்ரிக்காவிற்கு அவர் சென்றபோது அங்கு இந்திய மக்கள் படும் துன்பத்தைக்  கண்டு கொதிதெழுந்தார். இந்திய  மக்களுக்கு போராடி அவர்களுக்கு  விடுதலை பெற்று தந்தார். இந்தியா திரும்பிய பின், ஆங்கிலேயரை  எதிர்த்து அகிம்சை வழியில் போராடினார்.பல்வேறு  போராட்டங்களான   "உண்ணா நோம்பு ,வெள்ளையனே வெளியேறு  இயக்கம், உப்பு சத்தியாகிரகம் முதலியவற்றை நடத்தி சிறை சென்றார்.மீண்டும் மீண்டும்    எழும் போராட்டத்தால் நிலை குலைந்த ஆங்கிலேயர் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment